உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அரசாங்க கூறுகின்றது. அப்படியாயின் தேங்காயின் விலையும் உலக சந்தையில் அதிகரித்து விட்டதா? என்று ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார்.
கேள்வி நேரத்தின் போது ரவிகருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போது ஆளுங் கட்சி பிரதம கொறாடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அளித்த பதில் தொடர்பாக குறுக்கு கேள்வி கேட்டபோதே ரவி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாய்மூல கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளுங்கட்சி பிரதம கொறாட உலக சந்தையில் மசகு எண்ணெய் கோதுமை மா எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றார்.
இதன்போது குறுக்கிட்ட ரவிகருணாநாயக்க அதனால் தான்தேங்காயின் விலையும் 40 தொடக்கம் 45 ரூபாய்களுக்கு அதிகரித்து விட்டதோ? என்று வினாவினர். அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதனால் பொருட்களின் விலை அதிகரிப்பு மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஏனென்றால் அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகயை உரிய முறையில் முன்னெடுத்து செல்கின்றது என்று அமைச்சர் ஜெயராஜ் தெரிவித்தார்.