வவுனியா கெப்பதிகொல்லாவ பிரதான வீதியில் இன்று காலை கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இதில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர். வவுனியா கெபதிகொல்லாவ பிரதான வீதி மடுகந்தை பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இன்று காலை இக்கிளேமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த பொலிஸார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.