யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் கேட்கும் குண்டுச் சத்தங்களால் அங்கு வாழும் மக்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அது மாத்திரமன்றி வெளவால்கள்கூட அங்கு வாழ முடியாது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன' என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்தார். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றிணையாவிட்டால் எமது நாட்டின் எதிர்காலமும் எமது எதிர்காலச் சந்ததியினரும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் சொன்னார்.
கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இலக்கம் 5 பாவனையாளர் நீதிமன்றத்தை நேற்று செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் நான் யாழ்ப்பாணத்தில் நீதிமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்த போதும் குண்டுச்சத்தங்கள் கேட்டன. அதனால் நான் அதிர்ந்து போனேன். அங்கு வாழும் மக்களும் தினம் தினம் குண்டுச் சத்தங்களால் அதிர்ந்து போயுள்ளனர் அதேநேரம் நீதிமன்றத் திறப்பு விழாவில் என்னால் சுமக்க முடியாத மாலை அணிவித்து வரவேற்றார்கள். இதன் மூலம் நீதியின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பட்டது.
யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் கேட்கும் குண்டுச் சத்தங்களால் வெளவால்கள்கூட அங்கு வாழ முடியாது இங்கு இடம்பெயர்ந்துள்ளன.
யாழ். விவசாயிகள் சிரமம்
இன்று யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்கும் நெருக்கடிக்கும் மத்தியிலேயே விவசாயத்தை மேற்கொள்கின்றனர். பழமையான முறைகளையே பின்பற்றுகின்றனர். யாழ். குடாநாட்டில் முந்திரிகை உட்பட எதனை பயிரிட்டாலும் நல்ல விளைச்சல்களை பெறக்கூடிய நிலங்கள் உள்ளன. ஆனால் யுத்தத்தால் பின்னடைவைக் கண்டுள்ளன.
மன்னாரில் நிலங்கள் பாழடைந்துள்ளனஎமது மன்னர்கள் விவசாயத்தை வளப்படுத்துவதற்காக அணைகளை நிறுவினார்கள். ஆனால், இன்று அணைகளில் நீர் கடலைப் போய் சேர்கிறது.
மன்னாரில் "??????வவில் வெறுமனே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், விவசாய நிலங்கள் பாழடைந்து கிடக்கின்றது. மரமுந்திரிகை பயிரிடக்கூடிய 3000 ஏக்கர் நிலமும் பாழடைந்து போயுள்ளது. கிழக்கில் ????? பிரதேசத்தில் மரமுந்திரிகை மரங்கள் இருந்தாலும் அவை பலனற்று நிற்கின்றன.
எமது நாட்டில் வளங்கள் இல்லாமல் இல்லை. அனைத்தும் யுத்தத்தால் பலனில்லாமல் பாழடைந்து போயுள்ளன. குண்டுச் சத்தங்களே அதிகரித்துள்ளன. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போதே தொண்டைமானாறு கடலில் குளிப்பதற்கு ஆசைப்பட்டேன். இராணுவத்தினரிடம் எனது ஆசையை கூறினேன். ஆனால், தொண்டைமானாறு கடற்பிரதேசத்தில் மீன்கள் அதிகமாகவுள்ளதால் குளிக்க முடியாதென தெரிவித்தனர். எமது நாட்டில் இந்தளவுக்கு மீன் வளம் இருக்கும் போது வெளிநாடுகளிலிருந்து 5000 மில்லியன் டின் மீன்களை இறக்குமதி செய்கின்றோம். எமது வளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்திய சமுத்திரத்தை போஷிக்கிறோம்
மாவிலாறுக்கு அப்பால் டி.எஸ். சேனாநாயக்காவினால் கட்டப்பட்ட அணை உடைந்து போய் அந்த நீர் சமுத்திரத்தை போய்ச் சேருகின்றது. அத்தோடு மீன்களும் போய்ச் சேருகின்றன. இதன் மூலம் இந்து சமுத்திரத்தை போஷிக்கின்றோம்.ஏன் இந்த வளங்களை நாம் பயன்படுத்த முடியாது? தம்புள்ளையில்தம்புள்ளையில் தினம்தோறும் 300 கிலோ மரக்கறி வீசப்படுகிறது. இதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும்.
எண்ணெய் வளம்எமது நாட்டில் எண்ணெய் வளமுள்ளது. தற்போது அதனை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டுக்கு பெரும் நன்மை பயக்கும். ஆனால், இத்திட்டத்திற்குள்ளும் திருட்டுத் தனத்தை மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறான திருட்டுக்களை புரிவோருக்கு மோட்சமே கிடைக்காது. நரகத்திற்கே தள்ளப்படுவார்கள்.
காஸ் ஏகபோக உரிமை
காஸ் ஏகபோக உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி அதன் மூலம் கிடைத்த பணத்தை பக்கற்றில் சிலர் போட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் நரகம்தான் கிடைக்கும். இதனால் காஸ் விலையை குறைக்கச் செய்ய முடியாதுள்ளது. இல்லாவிட்டால் நீதியை நாடியிருக்க முடியும்.
நமக்காக நாம் பாவனையாளர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்க வேண்டும். அதற்காக ""நமக்காக நாம்'' என்ற போராட்டத்தை ஆரம்பிப்போம். அது ஆயுதம் தூக்கிய போராட்டமல்ல. சட்ட ரீதியான போராட்டம். கட்டுப்பாட்டு விலை
இரண்டாம் உலக மகா யுத்த காலத்திலும் கட்டுப்பாட்டு விலையை பிரிட்டிஷார் கடுமையாக கடைப்பிடித்தனர். 1977 வரை கட்டுப்பாட்டுக்கு விலைக்கு கீழான வாழ்க்கையையே முன்னெடுத்தோம். ஆனால், இன்று கட்டுப்பாட்டு விலையென்பது இல்லாமலேயே போய்விட்டது.
யுத்தத்திற்காக வரி நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் முப்பது வருடகால யுத்தம் காரணமாகவே விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. யுத்தத்திற்காக அதிக பணம் தேவைப்படுகிறது. அதற்காக பல்வேறு விதமான வரிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசாங்கம் அதிகரிக்கின்றது. இதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மறுபுறம் பணத்தின் பெறுமதியும் குறைந்து கொண்டே செல்கிறது.
ஒரு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி இந்தியா, பிரிட்டனின் நாணயங்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. ஆனால், இலங்கையில் ஒரு ரூபாவின் பெறுமதி குறைத்து கொண்டே போகிறது. நாம் விட்ட தவறுகளின் பிரதிபலன்களே இதற்கு காரணமாகும். யுத்தமும் இதற்கு பங்காளியாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தைவிட மோசமான யுத்தமே இடம்பெற்று வருகிறது. விலை÷யற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாவனையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை நீதிமன்றங்களின் திறப்பால் நிறுத்தி விட முடியாது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலமே அதனை முன்னெடுக்க முடியும். சுவரொட்டிகளால் விலை குறையாது அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக குறைக்க வேண்டும். சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென சுவரொட்டிகள் ஒட்டுவதால் எதுவும் இடம்பெறப்போவதில்லை. நடைமுறை சாத்தியமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சோதனைச் சாவடிகள்
சோதனைச் சாவடிகளை நீக்குமாறு உத்தரவிட்டபோது குண்டுகள் வெடிக்குமென விமர்சித்தார்கள். ஆனால் 2400 விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் உதவியினாலேயே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிவுகள் தடுக்கப்படுகின்றன.
ஒழுக்கம் தேவை ஆசிரியர்கள் திருட்டுத்தனமான சுகவீன விடுமுறை போடுகிறார்கள். இவர்கள் நீதிமன்றம் வந்தால் பிரம்படி வழங்கப்படும். ஆசிரியர் சேவையில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும்.நீதித்துறையில் ஒழுக்கம் பேணப்படுகிறது. எனவேதான் நியாயம் கிடைக்கின்ற தென்றும் பிரதம நீதியரசர் தெரிவித்தார். அமைச்சர் பந்துல குணவர்த்தன தனியார் துறையினருக்கு ஏகபோக அதிகாரத்தை வழங்கும் விதத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திலுள்ள ஷரத்துக்கள் திருத்தப்பட்டு பாவனையாளர்களை பாதுகாக்கும் விதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இங்கு உரையாற்றிய வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சும் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.