அனுராதபுரம் ரயில் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சியில் இருந்து கொழும்பு நோக்கிசென்ற ரயிலினை சோதனையிட்ட பொலிஸார் இந்த இரு தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்ததாக அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் பிரேமரத்ன தெரிவித்தார்.
செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 22வயது,27வயது தமிழ் இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்பது குறித்து ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்