அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஒபாமா போட்டியிட்டனர். இதில் ஹிலாரி சக வேட்பாளர் ஒபாமாவை மூன்று இடங்களில் வென்றுள்ளார்.
டெக்சாஸ்,ஓகியோ மற்றும் ரோட் தீவு ஆகிய இடங்களில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றுள்ளார். சக வேட்பாளரான ஒபாமா, வெர்மான்ட் என்னும் இடத்தில் மட்டும் வெற்றி பெற்றார்.
மேலும், குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் மொத்தம் உள்ள நான்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் ஜான் மெக்கன் வெற்றி பெற்றுள்ளார்.