வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் உள்ளுர் மக்களின் நன்மை கருதி புத்தளத்தில் அமைக்கப்படவுள்ள தமிழ் மொழி மூலமான தொழில்நுட்பக் கல்லூரிக்கு நிதியுதவி வழங்க நோர்வே அரசு முன்வந்துள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்படவுள்ள இத்தொழில்நுட்பக் கல்லூரியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயிற்சி நெறிகளை மேற்கொள்ளலாம்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள இக்கல்லூரிக்கு மாணவர்களை அனுமதித்தல், உத்தியோகத்தர்களை நியமித்தல் மற்றும் ஏனைய நிருவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை தொழில், தொழில் பயிற்சி அமைச்சே மேற்கொள்ளும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.