மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் பிள்ளையான்குழு வேட்பாளர்கள் தமது பிரசாரப்பணிக்கு இளம் யுவதிகளை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களிலேயே இந்த நடவடிக்கை அதிகமாக இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு வேளைகளில் ஆயுதங்களுடன் வீடுகளுக்கு வரும் பிள்ளையான்குழு உறுப்பினர்கள் இளம் பெண்கள் உள்ள வீடுகளுக்கு சென்று எந்த வேட்பாளருடன் செல்லவேண்டும் எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என வலுக்கட்டாய படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முரசுக்கு ஒருவர் தகவல் தருகையில்,
இவர்கள் இவ்வாறு; அழைத்துசெல்லாவிட்டால் தாங்களது வீடுகளுக்கு இரவில் வந்து விசாரணை என்ற போர்வையில் கெட்டவார்த்தைகளில் திட்டுவதாகவும் குடும்ப உறுப்பினரை கொல்வோம் என மிரட்டுவதாகவும தெரிவித்தார்.