யாழகுடா நாட்டின் வல்வெட்டிதுறை சமர்வாகு பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பெருமளவானோர் தீவிர விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 6மணிக்கு ஆரம்பமான இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை காலை 10மணிவரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆண்களின் அடையாள அட்டைகள் வாங்கிச்செல்லப்பட்டு பின்னர் அவர்களை தனித்தனியா தீவிர விசாரணை செய்த படையினர் பின்னர் அடையாள அட்டையை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்து.
இதேவேளை கைதடி பகுதியில் மாலை 6 மணிக்கு பின்பு நடமாடியதாக கூறி கந்தப்பு விநாசித்தம்பி என்ற முதியவரை நேற்று புதன்கிழமை இரவு படையினர் கைதுசெய்துள்ளனர்.