சதாம் ஹுசைன் கொலை செய்யப்பட்டதால் ஈராக்கின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அரசாங்கம் கருணாவை லண்டனுக்கு அனுப்பிவிட்டு பிள்ளையானுடன் கைகோர்த்து செயற்படுகின்றது.
இதேபோல், பிரபாகரனும் ஒப்பந்தத்திற்கு வருவாராயின் அரசாங்கம் அவரையும் தோளில் சுமந்து செல்லும் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். அவசரகாலச் சட்டத்தை மேலும் இரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபாகரன் ஒப்பந்தத்திற்கு வருவாராயின் அவரையும் அரசாங்கம் தோளில் சுமக்கும். அப்படியாயின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார்? என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலமாக தீர்வு காணமுடியாது என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்காக எம்மால் செய்யக்கூடிய சகல உதவிகளையும் செய்தோம்; அரசாங்கத்திற்கு வழங்கினோம் எனினும், அரசாங்கம் அந்தக் கையை கடித்துவிட்டது. எனினும், 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.