காணாமற்போதல், ஆள்கடத்தல், படுகொலை ஆகிய சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்று காணாமற்போதல், ஆள்கடத்தல், மனிதப்படுகொலை தொடர்பான நடவடிக்கை சுயாதீன ஆணைக் குழுவின் தலைவர் மகாநாம திலகரட்ண தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:சிலர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யாமல் அது தொடர்பான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து வருகின்றார்கள். இது சிக்கலை ஏற்படுத்தக்கூடியது.சில விதிமுறைகளுக்கு அமைவாகவே ஆணைக் குழுவும் மனித உரிமைகள் அமைப்பும் இச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும்.
2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 3ஆம் திகதி தொடக் கம் இதுவரை 7 ஆயிரத்து 130 பேர் காணமல் போயுள்ளனர். இவர்களில் கடத்தப்பட்டவர்களும் அடங்கும்.
இவர்களில் 6 ஆயிரத்து 633 பேர் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த விசாரணைகள் பற்றிய அறிக்கைகள் அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.