புத்தளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் இலவங்குளத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
படையினர் இலவங்குளம் கலஓயா பிரதேச காட்டுப் பகுதிக்குள் தமிழீ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இதøனயடுத்து, அப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல்களை மேற்கொண்டிருந்த சமயம் அங்கு கிடந்த சிறிய ரக குண்டு ஒன்று வெடித்துள்ளது.