News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

06-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மட்டக்களப்பு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நீதியானதும், நேர்மையானதுமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முறைப்பாடும் செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
 
கிழக்கு மக்கள் ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதன் ஆரம்ப நடவடிக்கையே இந்த உள்ளூராட்சித் தேர்தல் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
 
தேர்தலை நீதியாக நடத்தி முடிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கும் பொருட்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.
 
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
 
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியதாவது;
 
கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் மீட்டெடுத்த பின்னர் அங்கு இயல்பு வாழ்க்கை வழமை நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீண்ட தூரப் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. சகல கிராமங்களுக்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
 
இத்தகைய ஆரோக்கியமான சூழலிலேயே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. அரசாங்கம் இத்தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதில் உறுதிபூண்டுள்ளது. இன்றுவரையில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 29 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அவை கூட சிறு சம்பவங்களாகவே காணப்படுகின்றன. அவற்றில் 14 முறைப்பாடுகள் தொடர்பில் சுமுகமான தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
 
இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், குழுக்களும் சீரான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
 
எதிரணியினர் ஆயுதக் குழுவொன்று நடமாடுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளது. அப்படி எவரும் ஆயுதங்களுடன் நடமாடுவதாக இதுவரையில் முறைப்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
 
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் கருத்துத் தெரிவிக்கையில்;
 
மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலை கண்காணிப்பதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
வாக்குச்சாவடிகள், தேர்தல் அதிகாரிகள், வாக்குப் பெட்டிகள் போன்ற அனைத்துக்கும் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு தினத்தில் எந்தவிதமான பிரச்சினைகளுமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச்சென்று சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆயுதக் குழுவினரின் நடமாட்டம் குறித்து பொலிஸ் தலைமையகத்துக்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் கிட்டவில்லை. அவ்வாறு நடப்பதாக தெரியவந்தால் அவர்கள் எந்த தரத்தினராயினும் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டாது எனவும் குறிப்பிட்டார்.
 
* நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாதீர் தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு
 
டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
 
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாமல் மக்களை செயற்படுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
 
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான மாவை சேனாதிராஜா இந்த அழைப்பை விடுத்தார்.
 
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
 
இந்த அவசரகாலச் சட்டமானது தமிழ் மக்களின் குரலை நசுக்கி அழித்தொழிக்க செயற்படுகிறதே தவிர இனப்பிரச்சினைக்கு முடிவு காண செயற்பட்டதில்லை . எனவே, தான் நாம் இதை ஒவ்வொரு முறையும் எதிர்த்து வருகிறோம்.
 
குண்டு வீச்சுகளால் யாழ்ப்பாணம், மன்னார் மக்கள் அதிர்ந்து கொண்டிருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவே சுட்டிக்காட்டியிருக்கிறார். விமானக் குண்டு வீச்சுகள் உள்ளிட்ட தாக்குதல்களையே அவர் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இவரது இந்த கருத்து ஒரு தீர்ப்பு போன்றது தான்.
 
அத்துடன் , இந்த குண்டுச் சத்தங்களால் யாழ்ப்பாணத்தில் வௌவால்களுக்குக் கூட வாழ முடியாது போயிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
 
இதன் விளைவுகளை உணர்ந்தே அவர் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன். பிரதம நீதியரசர் குண்டு வீச்சுகளின் சத்தத்தைப் பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். எனினும் அதன் விளைவுகளையும் பற்றி அவர் பேச வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
 
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடுமென்ற அசட்டுத்தனமான எண்ணத்துடன் அரசாங்கம் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி வருகிறது.
 
கிழக்கு மாகாணத்தில் மக்களின் அபிமானத்தைப் பெற்ற எமது தமிழரசுக் கட்சி போட்டியிடவில்லை என்பதால் உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற முடியுமென்ற நப்பாசையுடன் அரசாங்கம் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
 
இதன்மூலம், இந்த அரசாங்கமும் இயக்கங்களும் எதிர்பார்ப்பது என்ன? அங்குள்ள எமது மக்களை இன ரீதியாக பிளவுப்படுத்துவதே அரசின் இந்த செயற்பாட்டின் நோக்கமாகும். அதற்கு எமது மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.
 
ஜனநாயகம் என்ற போர்வையில் இராணுவ அடக்கு முறையின் கீழ் இங்கு தேர்தலொன்றை நடத்தப் பார்க்கின்றனர்.
 
இதேநேரம், நாம் இனிமேலும் கிழக்கில் தேர்தலில் கலந்து கொள்ள மாட்டோமென்ற நினைப்பில் அரசாங்கமும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஆயுதக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். எனினும், நாம் எமது உத்தியை மாற்றி எமது கிழக்கு மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகச் செயற்படவுள்ளோம். எனவே, கிழக்கு மக்கள் நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்க்க வேண்டும். இதுவே, எமது செய்தியாக இருக்கிறது. மக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும். காலம் மாறும் என்றார்.
 Other Articles
•  13 May 2008 01:14:00 ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து தமிழரை விலகிக்கோருகிறது இலங்கை இராணுவம்
•  13 May 2008 01:07:00 வடமராட்சியில் வீதித்தடை
•  13 May 2008 01:04:00 தமிழ் முஸ்லிம் இனவாதத்துக்கு கிழக்கில் தூபமிடப்பட்டுள்ளது
•  13 May 2008 01:02:00 பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
•  12 May 2008 17:43:00 இரு காவல் துறை உத்தியோகத்தர்கள் கொலை
•  12 May 2008 16:31:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்(மேலதிக தகவல்)
•  12 May 2008 16:21:00 விமல் வீரவன்ச தலைமையிலான "தேசிய சுதந்திர முன்னணி''
•  12 May 2008 16:10:00 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் புலிகள் சார்பாக திரும்பும் ஆபத்தை உருவாக்கியுள்ளது
•  12 May 2008 15:57:00 2 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள்
•  12 May 2008 15:43:00 கப்பல் விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது
•  12 May 2008 15:24:00 சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கும் யாழ்.படைத்தரப்பினருக்கும் இடையே சந்திப்பு
•  12 May 2008 15:22:00 மணலாறு, மன்னார் பகுதிகளில் மோதல்
•  12 May 2008 15:01:00 பூசா வதைமுகாம் சிறைக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகள்
•  12 May 2008 13:11:00 ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
•  12 May 2008 13:07:00 அரசுக்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்குவோம்
•  12 May 2008 13:06:00 வத்தேகம பகுதியில் 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது
•  12 May 2008 13:04:00 புதிய கட்சி கடுமையான சிங்களத் தேசியவாத கட்சியாக மாறக்கூடிய அபாயம் நிலவுகிறது
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions