இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிக்கும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கி வந்த சர்வதேச சுயாதீன முதன்மை குழு தமது செயற்பாடுகளை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.
நிலவும் சூழ்நிலையின் கீழ் உச்ச அளவிலான முன்னேற்றத்தை தமது அமைப்பு பெற்றுக்கொண்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் முன்னாள் இந்திய நீதிபதி கே. பகவதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை தமது அமைப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்வைத்த போதிலும் அவற்றில் பயன் கிடைக்கப் பெறவில்லை எனவும், பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரத்திலிருந்து மிகவும் குறைந்த மட்டத்தில் நிலவுவதாகவும் அவற்றின் வெளிப்படைத் தன்மை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஐ.ஐ.ஜீ.ஈ.பீ தெரிவித்துள்ளது.