மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலையொட்டி இடம்பெற்றுவரும் பிரசாரங்களில் இதுவரை 30 வன்முறைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது அறிக்கைகள் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அளவுக்கு பெரியளவில் வன்முறைகள் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
101 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 9 உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் வன்முறைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும்வேளையிலேயே பிரதிப்பொலிஸ் மா அதிபர் இலங்ககோண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் இப்பகுதியில் போட்டியிடும் பிள்ளையான்குழுவினர் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரசாரப்பணிகளுக்கு செல்லவிடாது தடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.