சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் ஒன்று நாளை சென்னையில் இருந்து இலங்கை வரவுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் நாளை சனிக்கிழமை மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு சர்வதேசரீதியில் பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது.
நாளை இலங்கை வரும் மகளிர் தின விசேட விமானத்தில் விமானிகள் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்களே இடம்பெறுகின்றனர். இந்திய விமானி எம். தீபா இந்த விமானத்தை ஓட்டிவருவார். அவருக்கு உதவயாக விமானி என்.ஆர். வேதா செயற்படுவார் இந்த விமானம் பின்னர் சென்னைக்குத் திரும்பிச் செல்லும் என்றும் எயார் இந்தயா நிறுவனம் அறிவித்துள்ளது.