கண்டியில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த சார்க்கின் 15ஆவது மாநாட்டை பாதுகாப்பு காரணத்தால் கொழும்பில் நடத்த ஆராய்ந்துவருவதாக அரச தகவல்கள் தெரிவி;க்கின்றன.
15ஆவது சார்க் மாநாடு கண்டியில் ஆக்ஸ்ட் மாதம் ஏற்பாடுசெய்யபட்டிருந்ததோடு சார்க் நாட்டு தலைவர்களுக்கும் இலங்கையரசு அழைப்புவிடுத்திருந்தது. குறிப்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த மாநாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் பெரும் ஆவலாக இருந்துவருகின்றது.
இந்த நிலையில் சார் மாநாட்ஐ நடத்துவதற்காக கண்டி நகரம் 250 கோடி ரூபாவில் அபிவிருத்தியும் செய்யப்பட்டுவருகின்றது.
இந்த நிலையிலேயே பாதுகாப்பு காரணங்களுக்காக சார்க் மாநாட்டை கண்டியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக இலங்கை பாதுகாப்பு தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.