08-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணக்குழுவில் வடபகுதியில் இருந்து 300 பேர் அடைக்கலம் கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான தர்மசிறீ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆயுததாரிகளின் கொலை அச்சுறுத்தல் காரணமாக யாழ். குடாநாட்டில் உள்ள 300 பொதுமக்கள் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் கோரியுள்ளனர். யாழ். குடாநாட்டில் உள்ள சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இரு வீடுகளில் அவர்கள் தங்கவைகப்பட்டுள்ளனர். பெண்களும், சிறுவர்களும் ஒரு வீட்டிலும், ஆண்கள் பிறிதொரு வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகள் சிறை அதிகாரிகளினால் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் வெளிப்புற பாதுகாப்புக்கள் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. அச்சம் காரணமாக யாழ். குடாநாட்டில் இருந்து மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் அடைக்கலம் கோரி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது என்றார் அவர்.
|