சிறிலங்காவில் ஜனநாயகம் கேள்விக்குறியாவதற்கு முன்னர் கனடிய அரசாங்கமும் சர்வதேசசமூகமும் விரைந்து நடவடிக்கைகளை
எடுக்கவேண்டுமென கனேடிய தமிழ் இளையோர் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
அத்தோடு சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளையும் அது வன்மையாகக் கண்டித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கி.சிவநேசன் சிறிலங்கா இராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விடுத்த கண்டன அறிக்கையிலேயே கனடிய தமிழ் இளையோர் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
மாமனிதர் கி.சிவநேசன் மீது நடத்தப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் கோழைத்தனமான தாக்குதல் தமிழ்மக்களினுடைய ஜனநாயக முகத்தின் மீது நடத்தப்பட்டதாகும். அத்தோடு ஜனநாயக ரீதியான குரல்களை ஒழிக்கும் அரசின் நடவடிக்கையின் அடுத்தகட்டமுமாகும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.