மன்னாரிலுள்ள தள்ளாடி, சௌத்பார், வங்காலையின் தோமஸ்புரி மற்றும் நானாட்டான் ஆகிய படை முகாம்களில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 7.15 மணிமுதல் நேற்று மதியம் 12.30 மணிவரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான அடம்பன் மற்றும் மாந்தை மேற்கு ஆகியவற்றை நோக்கி சரமாரியான ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்களை ஒட்டி நேற்றுக்காலை 7 மணிமுதல் 11 மணிவரை மன்னார் மதவாச்சிக்கிடையிலான பாதை மூடப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னாரிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்ல ஆயத்தமான வாகனங்கள் எவையும் நேற்றுப் பிற்பகல் வரையும் மன்னாரில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படவில்லை.
வவுனியா மற்றும் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வாகனங்களும் முருங்கன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு படையினராலும் பொலிஸாரினாலும் கடும் சோதனைக் குட்படுத்தப்பட்டன.