இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தீர்வை அறவிடப்படவுள்ளது. இதன் பிரகாரம் இறக்குமதி செய்யும் அரிசி கிலோ ஒன்றுக்கு 20 ரூபா தீர்வை அறவிடப்படும். என்று வர்த்தக வாணிப துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய அரிசி உற்பத்தியை அதிகரித்து உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்கின்ற அரிசிக்கு தீர்வை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலமாக உள்ளூர் நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
முக்கிய மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் அரிசி இறக்குமதியை நிறுத்தி உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்யும் அரிசிக்கு தீர்வை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.