News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தேர்தலில் புத்திசாதுர்யமாக செயற்படுமாறு த.தே.கூ. வலியுறுத்தல்

08-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாராவது வாக்களிக்குமாறு நிர்பந்தம் செய்தால் புத்திசாதுர்யமாகச் செயற்பட்டு வாக்குகளை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா நேற்று வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
முன் எப்போதும் இல்லாதவாறு பெரும் நெருக்கடியானதொரு சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகரம் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுத் திணித்துள்ளது.
 
இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்பது உங்களுக்கு நன்கு தெரிந்ததே.
 
வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைத் துண்டாடி, தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்களை அபகரித்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, எமது பாரம்பரிய பூர்வீகப் பிரதேசத்தைச் சூறையாடும் சதிமுயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகச் செயற்படுகின்றது.
 
அது மட்டுமல்ல, இத்தகைய தேர்தல்களின் மூலம் எங்கள் சொந்தப் பூமியிலேயே எம்மைப் பலவீனப்படுத்தி, அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடவும் அரசாங்கம் கங்கணங்கட்டி நிற்கின்றது.
 
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, பேரினவாத போர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இராணுவ நடவடிக்கை மூலம் தமிழ்த் தேசிய இனத்தைப் பூண்டோடு அழிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
 
அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயங்களைக் கண்டு இந்த அரசாங்கத்தினை விட்டு வெளியேறி நிற்கின்றது.
 
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த அரசின் தீய செயற்பாடுகளுக்கும், அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எம் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் இக்குழுக்கள் துணை போகின்றன. எனவே அரசாங்கத்திற்கு உறுதுணையாக நிற்கும் அடிவருடிக் கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த முன்வர மாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.
 
இவ்வாறான சூழலில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் மாநகர, பிரதேச சபைத் தேர்தல்களின் போது அவதானமாகவும் நிதானமாகவும், புத்திசாதுரியமாகவும் சிந்தித்து, சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் துணை போகின்ற கட்சிகளுக்கோ குழுக்களுக்கோ அல்லது அரசாங்கத் தரப்புக்கட்சிக்கோ தானும் உங்கள் வாக்குகள் சேராமலும், மற்றவர் உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த இடமளிக்காமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடனும் உரிமையுடனும் வேண்டி நிற்கின்றோம்.
 
உங்கள் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக நிர்ப்பந்திக்கப்படுவீர்களாயின் அச்சூழ்நிலையில் மாற்றாருக்கு உங்கள் வாக்குகள் சென்றடையாமல் செல்லுபடியற்றதாக்க பின்னிற்க மாட்டீர்கள் என்றும் நம்புகின்றோம்.
 
மாற்றாருக்கு மண்டியிடாத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கொள்கைக்காக விடுதலைப்பற்றுடனும் சுதந்திர இலட்சியத்துடனும் தேர்தல் களத்திலும் சரி, போராட்டக் களத்திலும் சரி அர்ப்பணித்து நின்ற தன்மானத் தமிழர்கள். அதனை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து நிற்போம். நம் தேச மக்களுக்கும் அனைத்துலகத்திற்கும் இச்செய்தியை உரக்கச் சொல்வோம். உணரச் செய்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 Other Articles
•  12 May 2008 13:01:00 கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் கேணல் சூசை
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions