09-03-2008
 |
|
|
|
| Article by: |
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர்-திரு.கி.சிவநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. மக்கள் வணக்கத்திற்காக இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது. பொதுச்சுடரினை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து மாமனிதரின் புகழுடலுக்கு அவரது துணைவியார் திருமதி சிவநேசன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து புலனாய்வுத்துறைப்பொறுப்பாளர் ச.பொட்டு மற்றும் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், நீதி நிர்வாகப்பொறுப்பாளர் பரா,அதனைத்தொடர்ந்து அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளார், செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் என பெரும்திரளானோர் இறுதி மலர் அஞ்சலியுடன் மாமனிதரின் நிகழ்வு நடைபெற்றது.
|