சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளரும், சரிநிகர் பத்திரிகையின் ஆசிரியருமான பி.சிவகுமார் சிறீலங்கா காவல்துறையினரின் விசாரணைகளை அடுத்து நேற்று சனிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு சென்றபோது கைது செய்யப்பட்டிருந்தார். இவர் நேற்று மாலை வரை சிறீலங்கா பயங்கரவாதத் குற்றத் தடுப்பு புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஏனைய நால்வர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.