இலங்கை உட்பட சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தர் குழுவொன்றை ஐக்கிய நாடுகள் சபை அமைத்திருக்கின்றது.
இந்த மத்தியஸ்த்த குழுவில் சர்வதேச புகழ் பெற்ற நிபுணர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் பி.லின்பாஸ்கோ மேற்கொண்டுவருதாக தெரிவித்துள்ளார்.
இந்த மத்தியஸ்த்த குழுவானது ஐ.நா.வின் அரசியல் விவகார திணைக்களத்தின் நடவடிக்கைக்கு வலுவூட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர நடவடிக்கைக்கு உதவியளிப்பதன்மூலம் மோதல்களை தடுத்து நிறுத்துவதற்கு இக்குழுவினர் உதவியளிப்பார்கள்.
இக்குழுவினர் அரசியல் விவகார திணைக்கள உதவியாளர்கள் ,யுத்த நிறுத்தம் ,நீதித்துறை மாற்றங்கள்,அதிகாரப்பகிர்வு ,அரசியல் அமைப்பு ரீதியலான ஏற்பாடுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற உலகின் முன்னணி நிபுணர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
அண்மைய காலமாக மத்தியஸ்த்த உதவிக்கான தேவைகள் அதிகரித்துள்ளதாகவும் விசேடமா அதிகார பங்கீடு தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இக்குழுவினா உதவிபுரிவார்கள் என பாஸ்கோ தெரிவித்துள்ளார்.