இம் மாதம் முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் திருகோணமலை நகரில் அடையாளம் காணப்படாத குழுவினரால் நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர்
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கந்தையா கிருபைராஜா தெரிவித்தார்.
திருகோணமலை முத்துகுமார சுவாமி வீதியில் உள்ள தனது வீட்டில் இந்த அரச வங்கி அலுவலர் ஒருவர் இலக்க தகடு இல்லாத முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் காணப்படாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கைலைநாதன் என்ற ஐம்பத்தி இரண்டு வயதானவரே கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.