யாழ் தீவகத்தில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 61 அகவையுடைய நாரந்தனையைச் சேர்ந்த இரத்தினம் வடிவேலு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்துப்பாக்கிச் சூடு நேற்று சனிக்கிழமை ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதியவரின் சடலம் மரண விசாரணைக்காக யாழ் போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.