சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புகள் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரி மாளிகையிலிருந்து செயலகம் மற்றும் மாளிகைக்கு மகிந்த பயணம் செய்யும் போதும் திரும்பி வரும்போதும் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டவர்களில் அஜ்மீர் என்ற சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
நிசாந்தன் என்ற கரும்புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் நபரை பணி நேரங்களிலும் அவர் தமது சகோதரர் எனக் கூறி மகிந்த பயணித்த பாதைகளில் நிறுத்தியதாகவும் அஜ்மீர் மீது குற்றம்சாட்டி காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.