மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற தேர்தல் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையளர் கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்படுத்தப்பட்ட 285 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று 5000க்கும் மேற்ப்பட்ட பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையளர் கிருஸ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து 100 ஊழியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வாக்கு பதிவு நிறைவுபெற்றவுடன் இடம்பெறும் வாக்கெண்ணிக்கை தொடர்பான பயிற்சி ஒன்று தற்போது அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றுவருவதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையளர் கிருஸ்ணானந்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.