சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையின் தொடச்சியின் அரஜாகம் தான், தமிழ் மக்களுக்கான நாடாளுமன்றம் வரை சென்று குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனின் படுகொலையாகும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைப் படம்போட்டுக் காட்டியிருக்கிறது.
இந்த நிலையில் அனைத்துலக சமூகம், நவீன கிட்லராக மாறி மகிந்த ராஜபக்ச தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்சின் அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வரவேண்டும்.
இதனைக் கருத்திற்கொண்டு சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கும் அனைத்துலக சமூகம், ஆயுதங்களைக் கொடுக்கக்கூடாது, சிங்கள வெறிபிடித்த மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து எல்லா வகையிலும் ஈழத் தமிழர்கள் போராட வேண்டிய முக்கிய கட்டம் இது.
சிங்கள வெறிபிடித்த அரசாங்கத்தின் இரைக்குப் பலியாகிய சிவநேசன் அவர்களின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும் கண்ணீர் அச்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.