"மாமனிதர்" கி.சிவநேசனின் புகழுடல் போராளிகள் மற்றும் தமிழ் மக்கள் பிரியாவிடை கொடுக்க தாயக மண்ணில் விதைக்கப்பட்டது.
மல்லாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு இறுதி வணக்கக்கூட்டம் நடைபெற்றது.
தேசியப் பணிக்குழுப் பொருளாளர் மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழீழ மாவீரர் பணிமனை பணிமுதல்வர் பொன். தியாகம் ஏற்றினார்.
ஈகச்சுடரை சிவநேசனின் துணைவியார் ஏற்றி மலர்மாலை சூட்டினார்.
தொடர்ந்து மலர்மாலைகள் சூட்டப்பட்டன.
புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்மினி சிதம்பரநாதன், சிவநாதன் கிசோர், க.பத்மநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செ.கஜேந்திரன், க.கனகசபை, ஆசிரியர் தனிநாயகம், அருட்திரு கருணாரட்ணம் அடிகளார் ஆகியோர் வணக்க உரைகளை நிகழ்த்தினர்.
போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்கள் அணிதிரண்டு பிரியாவிடை கொடுக்க அனிஞ்சியன்குளம் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் "மாமனிதர்" கி.சிவநேசனின் புகழுடல் விதைக்கப்பட்டது.