அனைத்துலகப் பெண்கள் நாள் நிகழ்வுகள் நேற்று யேர்மனி எசன் நகரில் நடைபெற்றது. யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வு மாமனிதர் சிவநேசனின் இழப்பை அடுத்து மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
பாரதி இசைக்குழுவினரின் மாவீரர் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்ற இந் நிகழ்வில் 350க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்து கொண்டார்கள்