நாகர்கோயில் மற்றும் முகமாலைப் பகு திகளில் நேற்றிரவு அகோர ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.மாலை தொடக்கம் இங்கிருந்து அங் கும் அங்கிருந்து இங்குமாக அடிக்கடி ஷெல்தாக்குதல்கள் நடைபெற்றன.
இரவு சுமார் 10 மணிக்குப் பின்னர், நள்ளிரவுக் குப் பின்னர் இச் செய்தி எழுதப்படும் வரை ஒரே தொடர்ச்சியாக அகோரமாக ஷெல் தாக்குதல் நடைபெறும் சத்தங்கள் கேட்டன.தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலிருந்து ஷெல்கள் சீறிப்பாய்ந் தன. அங்கிருந்து புலிகள் ஏவிய ஷெல்கள் தென்மராட்சிப் பகுதியில் வந்து வீழ்ந்து வெடித்தன எனத் தகவல்கள் தெரிவித்தன.
தென்மராட்சி , வடமராட்சியிலிருந்து பீரங்கி மற்றும் ஷெல்கள் ஏவப்பட்ட சத் தங்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிரவு தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தன. இதேவேளை நாகர் கோயில்முகமாலைப் பகுதிகளில் நேற்றுப் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அரசுப் படை களும் விடுதலைப் புலிகளும் கடும் பீரங்கி,ஷெல் தாக்குதல்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.ஷெல்கள் பல தென்ம ராட்சியில் படைநிலைப் பிரதேசங்களில் வந்து வீழ்ந்தன என அறிய வந்தது. தென்மராட்சியின் தென்முனையில், இதனால் பெரும் பதற்றம் நிலவியது.