மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலைமுதல் இடம்பெற்றுவரும் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
285 வாக்களிப்பு நிலையங்களில் இன்று திங்கட்கிழமை காலை 7மணியளவில் ஆரம்பமான இந்த வாக்களிப்பு பணிகள் மாலை 4மணிக்கு நிறைவடைய இருக்கின்றது.
இதேவேளை இடம்பெற்று மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் மக்கள் பெருமளவு வாக்களிப்பதை தவிர்த்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகராட்சி தேர்தல்களும் சிறப்பாக இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் நகர மக்கள் பெருமளவு வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பல வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் சில இடங்களில் மக்கள் ஓரளவு வாக்களிப்புகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலில் மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் முழு உடல் பரிசோதனையின் பின்னரே வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவேளையில் மட்டக்களப்பு மாவட்டம் முமூவதும் இன்றும் இராணுவ மயப்பட்ட நிலையே
காணப்படுகின்றது.விசேட அதிரடிப்படையினரும் படையினரும் பொலிஸாரும் இணைந்து வீதிகளில் கடும் ரோந்து பணியில் ஈடுபட்டுவருவதுடன் வீதியில் சென்றோர் கடும்சோதனைக்குட்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபை-54948, 175 வேட்பாளர் போட்டியிடுகின்றனர் 19பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மண்முனை பற்றில்-18759 வாக்காளர்,96 போட்டியிடுகின்றனர் ,9பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்முனைமேற்கில் 15771 வாக்களிக்கவுள்ளனர்,48பேர் போட்டியிடுகின்றனர்,9பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மண்முனை தென்மேற்கில் 14880பேர் வாக்களிக்கவுள்ளனர்,36பேர் போட்டியிடுகிறனர்,9பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
போரதீவு பற்றில் 28116பேர் வாக்களிக்கவுள்ளனர்,24பேர் போட்டியிடுகி;ன்றனர்,9பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மண்முனை தென் எருவில் பற்றிலிருந்து 38386 பேர் வாக்களிக்கவுள்ளனர், 52பேர் போட்டியிடுகின்றனர்,
16பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
ஏறாவூர் பற்றிலிருந்து 45336 பேர் வாக்களிக்கவுள்ளனர்,190பேர் போட்டியிடுகி;ன்றனர்,14பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கோரளைப்பற்றிலிருந்து 41856பேர் வாக்களிக்கவுள்ளனர்,135பேர் போட்டியிடுகின்றனர்,11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
கோரளைப்பற்று வடக்கிலிருந்து 12419 பேர் வாக்களிக்கவுள்ளனர்,75பேர் போட்டியிடுகின்றனர்,11 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.