இலங்கை சேமிப்பு வங்கி இன்று புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சேமிப்பை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியில் வைப்புக்களுக்கு சிறந்த பாதுகாப்புக் கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே செயற்பட்ட பிரமுக வங்கிச் சேவை மூடப்பட்டதனால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் நன்மைகள் கிடைக்கவுள்ளன. இந்த வங்கியில் பணத்தை வைப்புச் செய்திருந்தவர்களுக்கு பணத்தை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அப்போதைய பிரதமராகவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த வங்கிச் சேவை அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.