மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெறும் தேர்தலில், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமை ஈடுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ். தண்டாயுதபாணி அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பாடசாலைகள் வாக்குச் சாவடிகளாகவும், வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகவும் செயற்படவுள்ளன.
இவ்வாறு தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதுவும் இன்று நடைபெறாது. இன்றைய தினத்துக்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.