மட்டக்களப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலை 7 மணிமுதல் 4மணிவரை மட்டக்களப்பின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.
இதன்படி மண்முனை தென் எருவில் பிரதேச சபைக்கான தேர்தலில் இதுவரை 40வீதமானோரே தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் களுதாவளை மற்றும் பெரியகல்லாறு,கோட்டைக்கல்லாறு பகுதிகளில் வாக்குபதிவுகள் கடும் மந்தகதியிலேயே இடம்ப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தேடு போரதீவுபற்று பிரசே செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களிலு; கடும் மந்த கதியிலேயே வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக போரதீவுபற்று பிரதேச சபை தெரிவத்தாட்சி அதிகாரி எஸ்.உதயசிறி தெரிவித்தார்.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் 45 வீதமே வாக்குப்பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட தமிழ் பிரதேசங்களில் வாக்குப்பதிவு கடும் மந்த நிலையை இடம்றெ;றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 விகித வாக்குகளே அப்பகுதியில் பதியப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரசேத செயலக தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.