தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்திய பொருளாதர தடை விதிக் வேண்டும்மென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தயுள்ளார்.
சென்னையில் தங்கியுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி.தமது பாரளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையிலே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்வபட்டதற்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவும் ,இலங்கை அரசம் பொறுப்புபேற்க வேண்டும் என்றும் ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் எந்தவேளையும் தாங்கள் கொல்லப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொசோவோ போல விரைவில் சுதந்திரம் தமிழ தனியரசை அமைக்கும் வரை தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. என்றும் தமிழீழத்திற்காக தமது நாடாளுமன்ற உறுப்புரிமைய தூக்கி எறியத் தாயராக இருப்பதாகவும் அவர் சுறினார் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை பேராட்டத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீது பொருளாதர தடை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுது குறித்து ஜ.நா.சபையில் இந்தியா புகார் செய்து நடவடிக்கை எடுக்க கோர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்