வடபோர் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சுமார் 3 மணித்தியாலங்களாக கடுமையான எறிகணை வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தென்மராட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை அதிகாலை 1 மணிவரை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதுதொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப் கிடைக்கப்பெறவில்லை.