அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாங்கமன்கந்த பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு தமிழ் இளைஞர்கள் விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் 3மணியளவில் சாங்கமன்கந்த,உமரிக்குளம் பகுதியில மறைந்திருந்த விசேட அதிரடிப்படையினர் சைக்கிளில் சென்ற தமிழ் இளைஞர்கள் இருவரை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனவும் இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.