News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?

11-03-2008
5 / 5 (1 Votes)
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
10.02.2008.
 
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கௌரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
 
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரச கௌரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
 
சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.
 
ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும் போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.
 
சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.
 
இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.
 
இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.
 
நாம் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து  விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரையே நடாத்தி வருகின்றோம்.
 
நாம் இன்னமும் நோர்வேயின் தலைமையிலான அமைதிவழி முயற்சிகளிலிருந்து விலகவில்லை. நோர்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.
 
இந்த நிலையில், அரசியல்-இராணுவ- பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
 
"புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை."  என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.
 
இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப்போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 Other Articles
•  21 May 2008 17:04:00 இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு - சர்வதேச ஜூரிகள் பேரவை
•  21 May 2008 16:56:00 40 பேரில் 10 பேர் நீதி மன்றம் முன் நிறுத்தம்
•  21 May 2008 15:49:00 வடமராட்சியில் இராணுவத்தினரால் நால்வர் கடத்தல்
•  21 May 2008 15:26:00 தேசியத் தலைவர் அவர்கள் எண்ணுவதனை களத்தில் செய்து முடிப்பவர் பிரிகேடியர் பால்ராஜ்
•  21 May 2008 15:01:00 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான மேற்குலக இராஜதந்திரிகள் - மகிந்த சமரசிங்க
•  21 May 2008 13:19:00 புலிகள் கெரில்லா பாணியில் தாக்ககூடும்
•  21 May 2008 13:15:00 நீதி அமைச்சின் செயலாளர் யாழ்,விஜயம்
•  21 May 2008 13:14:00 கம்பஹாவில் தேடுதல் 2 தமிழ் யுவதிகள் கைது
•  21 May 2008 13:12:00 சீனாவுக்கு உதவி செய்யும் பொருட்டு விசேட வைத்திய குழு பயணம்
•  21 May 2008 13:10:00 வாழைச்சேனையில் பிள்ளையான் குழுவின் தாக்குதலில் 5 ஈபிடிபி உறுப்பினர் காயம்
•  21 May 2008 09:34:00 ஹிஸ்புல்லா நிபந்தனையுடன் ஆதரவு
•  21 May 2008 09:32:00 ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும் மக்கள்
•  21 May 2008 09:30:00 மேவின் சில்வாவின் அடாவடித்தனம்
•  21 May 2008 09:23:00 இன்று மனித உரிமைக்கு பரீட்சை
•  21 May 2008 09:21:00 மட்டக்களப்பில் காவல்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
•  21 May 2008 06:02:00 அம்பலாங்கொட வர்த்தக நிலையமொன்றில் தீ அனர்த்தம்
•  21 May 2008 06:01:00 விசாரணைகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கவுள்ளன
•  21 May 2008 05:58:00 கட்டுகஸ்தோட்ட ரயில் பாதையில் வெடிப்பு
•  21 May 2008 05:56:00 முகமாலையில் புலிகளின் நிலைகள் மீது விமானக்குண்டு வீச்சு
•  21 May 2008 05:54:00 கருணாவே தமது தலைவர்
•  21 May 2008 00:42:00 வாக்கெடுப்பில் நிச்சயமாக நாம் வெற்றியீட்டுவோம்
•  21 May 2008 00:40:00 முல்லைத்தீவு கொம்புவைத்த குளத்தில் கிளேமோர் தாக்குதல்
•  21 May 2008 00:38:00 தமிழ் மக்கள் கடத்தப்படும் சம்பவங்களை நிறுத்தாவிடின் போராட்டம்
•  21 May 2008 00:35:00 மேலதிக ஆசனம் தொடர்பில் இன்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
•  21 May 2008 00:24:00 சினைப்பர் தாக்குதல் விசேட அதிரடிப்படைவீரர் படுகாயம்
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 06:05:00 ஊர்காவற் படைச்சிப்பாய் பலி
•  20 May 2008 06:03:00 அரசின் கோரிக்கை ஜே.வி.பி.யால் நிராகரிப்பு
•  20 May 2008 05:58:00 முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் அரச அதிபர் மோனகுருசாமியும் போட்டி
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions