மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றின் மீது நேற்றுக்காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் முருகேசு சந்திரசேகரன் (வயது 38) என்பவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்திவெளிப் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் பாடசாலைக்கு அருகில் கிளைமோர்க் குண்டு ஒன்று இருப்பதாக நேற்று மாலை 7 மணியளவில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடத்தினர். அப்பொழுது அப் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இருந்து கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.