சமையல் எரிவாயுவை எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டு வருவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார்.
வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வரும் இரண்டு தனியார் நிறுவனங்கள் தமது விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்றவாறு அவற்றின் விலையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இந்த எரிவாயு சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எல்.பி.ஜி. நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட மாட்டாது. இதனால், நடைமுறையிலுள்ள விலையை விட 10 வீதம் குறைவான விலையில், இந்த எரிவாயுவை மக்களுக்கு விநியோகிக்க முடியுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.