கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைதீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரு தமிழ் பெண்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் 9.30 மணிவரை இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு தமிழ் பெண்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாத காரணத்தினாலும் பொலிஸ் பதிவு இல்லாத காரணத்தினாலும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.