நாட்டைப்பற்றிக் கருதாமல் அரசியல் இலாபங்களுக்காக முடிவெடுத்து செயற்பட்ட அனைவரும் நாட்டின் இன்றைய மோசமான நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டும்மென மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் பிரதான ஏற்பாட்டாளாரன மங்கள சமரவீர எம்.பி. தானும் சில அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டமைக்காக பொறுப்புப் கூற வேண்டியிறுப்பதாகவும் அதிலும் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்ததே தான் இழைத்த பெரும் பாவமொன்றம் கூறியிருக்கிறார்.
ஜக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் இணைந்தெ ஏற்படுத்திருக்கும் தேசிய சபைக்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்கும் முகமான “தேசியக் கொள்கைக்கான தேசிய ஆலோசனை” நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வேளை அங்கு உரையாற்றும் போதே மங்கள சமரவீர இவ்வாறு கூறினனார்.
“நாம் அனைவரும் பல கனவுகளுடன் இருக்கிறோம். யுத்தமில்லாத சமூகம் பற்றிக் கனவு காண்கிறோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு ஜக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் இலங்கையர்களாக வாழும் யுகத்திற்கு கனவு காண்கிறோம்.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி மாற்றுக்கருத்துக்களை தெரிவிக்;கக்கூடிய ஜனநாயக நாடு பற்றிய நாம் கனவு காண்கிறோம். இதேபோல் இந்த நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்கும் தலைமைத்துவமொன்றிற்கும் கனவு காண வேண்டியுள்ளது.
இந்த கனவுகளை நிறைவேற்ற சில முயற்சிகள் மேற்கொள்ளபட்டிருந்தாலும் சுதந்திரம் பெற்று 60 வருடங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இலங்கை தோல்வியடைந்த நாடாக சென்று கொண்டிருக்கிறது.
ஒரு மாத்ததுக்கு முன்னர் இடத்துக்கிடம் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்ற சூழ்நிலைலேயே ஜனாதிபதி சுந்திர தின விழாவை கொண்டாடினார். தெற்கில் இடம்பெறும் குண்டு வெடிப்புக்கள் மட்டுமல்லாது வடக்கில் விமானக் குண்டு வீச்சுகளால் தமிழ் கொல்லப்பட்டுவருகின்றனர்.
சுதந்திரமடைந்து 60 வருடங்களில் 52 வருடங்கள் இனப் பிரச்சனைகளிலேயே கழிந்துள்ளது. 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அது இனயுத்தமாக உருவெடுத்து இன்னும் தொடர்ந்து வருகிறது என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.