ஸ்ரீலங்கா காவல்துறைக்கு அமெரிக்கா பயிற்சிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் மேச்சிஹேஸ்ட் போரியல் கல்லூரியின் அதிகாரிகள் விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
இவ்விசேட பயிற்சிகள் அண்மையில் களுத்துறையில் வைத்து ஸ்ரீலங்கா காவல்துறையினருக்கு வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இந்த பயிற்சி நடவடிக்கையில் ஸ்ரீலங்கா காவல்துறையின் 22 அதிகாரிகள் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது