இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டிற்கு மாகாண சபை மூலமான அரசியல் தீர்வு காணப்படுவதை தேசப்பற்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது பியகம பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சி;ல்வா இந்த கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவாத்தன ஜே.வி.பியின் பலத்தை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்ச்சிகளுக்கு ஒப்பான நடவடிக்கைகளையே தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் மேற்கொண்ட வருவதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவும் மாகாணசபை முறைமையை பலப்படுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும் மாகாண சபைகளை ஆதரிக்கும் எவரும் தேசப்பற்றுடையவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்