குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறவிட்டு வந்த கட்டணங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்தத் திருத்தங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அபயகோன் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தங்களின் படி கடவுச்சீட்டை ஒருவருடத்தால் புதுப்பிக்கும் கட்டணம் 200.00 ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கடவுச்சீட்டில் சேர்த்துக் கொள்வதற்கான கட்டணம் 500.00 ரூபாவாகவும், கடவுச்சீட்டிலுள்ள தொழில் விபரம் மற்றும் ஏனைய விடயங்களில் திருத்தங்கள் செய்வதற்கான கட்டணம் 500.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விசாக் கட்டணங்களிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் வசிப்பதற்கான விசா மற்றும் இலங்கையிலுள்ள சர்வதேச கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்