12-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இந்தியாஇலங்கையின் பயங்கரவாத நடவடிக்களை முற்றாக அழிப்பதற்கு இந்தியா தன்னாலனா அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் இராணுவத்தித்தளபதி லெ.. ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இராணுவத் ததளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்தியாவுக்கான தனது விஜயம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது என்றும் பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கி இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குமென்று இந்தியா தன்னிடம் உறதியளித்தாகவும் அவர் கூறினார். இரு நாட்டுப் படைகளுக்குமிடையிலான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் நன்கு அதிகரிப்பதுடன், பயிற்சிகள் தொடர்பாகவும் ஆராயும் நோக்கிலான விஜயமாக இது அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
|