இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணமல் போதல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட தனி நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மகாநாம திலகரட்ன என்பரால் காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் காணமல் போனவர்கள் என அறிவிக்கப்பட்ட அனைவரும் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனினும் காணமல் போனவர்கள் வீடு திரும்பிய சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் எவையும் அந்த அறிக்கையில் இல்லை என்று மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார் விசாரணை என்ற போர்வையில் எழுந்தமானமாக அறிக்கை ஒன்றை தயாரித்து அதனை வெளியிடுவதன் மூலம் அனைத்துலகையும் நாட்டு மக்களையும் ஏமாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார் மகாநாம திலகரட்னவின் அறிக்கையில் காணமல் போனதாக கருதப்படுபவர்கள் தமது தனிப்பட்ட பிரச்சினைகள் சமூக சிக்கல்கள் காரணமாகவே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியதில்லை என்றும் ஆட்கடத்தல் மற்றும் காணமல் போதல் சம்பவங்கள் குறித்தே விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்