ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யால பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
யால பிரதேச பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் நோக்கிலேயே இராணுவத்த தளபதி அங்கு விஜயமொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்ப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக தெற்கில் அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களையடுத்தே அங்கு பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் நேற்று இராணுவத்தளபதி விஜயமொன்றை மேற்கொணடதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவருடன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலரும் அங்க சென்று நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இதையடு;த்து அப்பகுதியின் பாதுகாப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து இராணுவத் தளபதி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார்.